மரண அறிவித்தல்

திருமதி. யோகலிங்கம் சரஸ்வதி

Tribute Now

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, குஞ்சுப் பரந்தன், உதயநகர் மேற்கு கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகலிங்கம் சரஸ்வதி (அன்னக்கிளி) அவர்கள் நேற்று 05.02.2024 (திங்கட்கிழமை) அன்று அமரத்துவமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு - இலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

வேலுப்பிள்ளை யோகலிங்கம் அவர்களின் அன்பு துணைவியாரும், சிவா (அமெரிக்கா), சிவகலாநிதி (கொழும்பு இரமாகிருஷ்ணா வித்தியாலயம்), சிவரஞ்சினி (அமெரிக்கா), சிவமதி (சுவிஸ்), சிவயோச்செல்வன் (லண்டன்), சிவசத்தியசீலன் (கனடா) ஆகியோின் அன்பு தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற திருமதி. கந்தசாமி - பரமேஸ்வரி, சிவபாலசுப்பிரமணியம் (சட்டத்தரணி - கிளிநொச்சி), சிங்கராசா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

சிறீபிரபாகரன் (லண்டன்), சண்முகப்பிரியா (கனடா), கல்யாணி (மாதகல்) ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.

 

ரேணுகா (அமெரிக்கா), மார்க்கண்டு (தேவன் - கொழும்பு), ஜோன்சன் (அமெரிக்கா), திரவியநாதன் (சுவிஸ்), நிலானி (லண்டன்), அருள்மொழி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

சாரங்கா, Dr. கீதாஞ்சன், கோபிதன், துவாரகன், துவாரகா (அமெரிக்கா), திலக்சன், கிஷாந்தி, திவ்யன் (சுவிஸ்), சஜீவனா, லோஜினா, சஞ்சிதன், கிர்ஷிகா (லண்டன்), அனுஷா, லனுஷா, அனுஷன், பிரவீன், கவினயா (கனடா), சங்கீதா, டனுஷிகா, நிஷாந்தன் (மாதகல்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்