மரண அறிவித்தல்

திருமதி. தவமணி குலசிங்கம்

Tribute Now

இலங்கை தெகிவளையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்போர்ண் Mulgrave வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி குலசிங்கம் அவர்கள் 19.10.2023 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான புத்திசிகாமணி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா - குலமணி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், தவசிங்கம் (தவா), யோகசிங்கம் (ராஜ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான இராமநாதன், செல்வராஜா, பத்மநாதன், சிதம்பரநாதன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

 

மாலினி, வத்ஷலா ஆகியோரின் மாமியாரும், நிரோஷினி- (Lynton),  டீலிப், கிரன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

 

பெனலப்பீ (Penelope)ன் அன்பு பூட்டியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்