மரண அறிவித்தல்

திருமதி. தம்பிப்பிள்ளை மாணிக்கம்

Tribute Now

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை மாணிக்கம் 08.09.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் - வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும், செல்வநாயகம், கோபாலசிங்கம் (ஓய்வுபெற்ற இறைவரி சிரேஷ்ட ஆணையாளர்) காலஞ்சென்றவர்களான கனகமணி , அன்னலட்சுமி மற்றும் மகேஸ்வரி (ஓய்வுபெற்ற நீதிமன்ற சுருக்கெழுத்தாளர்), இந்திரா (கனடா, முன்னாள் வித்தியானந்தா கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, பொன்னம்மா மற்றும் நல்லம்மா கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

தங்கமலர், சறோஜினிதேவி, காலஞ்சென்ற அருமைநாயகம், பரராசசிங்கம் (முன்னாள் கிளை முகாமையாளர் பலநோ பலநோக்கு கூட்டுறவு சங்கம்) அருளம்பலம் (கனடா), மைதிலி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

கோணேஸ்வரன் (எஸ்.கே பந்தல் சேவை உரிமையாளர்), கோகுலதீபன் (லேத் தொழிலக உரிமையாளர்), மலர்ச்செல்வி (ஆசிரியை, ஆனந்தபுரம் அ.த.க பாடசாலை), அகிலன் (மென் பொறியியலாளர்), கார்த்திக், காலஞ்சென்ற மோகீசன் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்), கோகுலவதனி (ஆசிரியை - முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயம்), தனேஸ்வரி (லண்டன்), கவிதா (லண்டன்), அபிநயா (கனடா ), ஆதிரையன் (கனடா ) பிரகவி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்