மரண அறிவித்தல்

திரு. சுப்ரமணியம் அருணாசலம்

Tribute Now

யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, நெல்லியடி, கிளிநொச்சி உடையார்கட்டு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் அருணாசலம் அவர்கள் 03.09.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு ஏகபுத்திரனும், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை - கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பாஸ்கரன் (ஸ்ரீ), சுதாகரன் (சுதா ), காலஞ்சென்ற கருணாகரன் (கண்ணன்), புவனாகரன் (ரஞ்சன்), சுதர்சினி (Sue), மனோகரன் (மனோ ), சசிகரன் (சசி)ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

அருள்வதனா, சாந்தினி, பிரியங்கா, கஜேந்திரன் (கண்ணன்), யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

கிரிஸ்ணிகா, அர்வின் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார். 

 

டிலன், தமிரா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார். 

 

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, சரஸ்வதி மற்றும் தெய்வானை, கதிராசி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

காலஞ்சென்றவர்களான தர்மராஜா, கனகலிங்கம், பாலச்சந்திரன், விக்னேஸ்வரன் மற்றும் ராஜேஸ்வரி, தம்பிராசா , பாலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்