மரண அறிவித்தல்

திரு. சொக்கலிங்கம் விநாயகலிங்கம்

Tribute Now

யாழ். தென்புலோலியூரைப் பிறப்பிடமாகவும், மாலிசந்தி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் விநாயகலிங்கம் (இளைப்பாறிய வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபை பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவின் (Public Service Commission) செயலாளர், திறைசேரி (Treasury) அத்தியட்சகர், தேர்தல் உதவி ஆணையாளர், வீடமைப்பு உதவி ஆணையாளர், புத்தளம் உதவி அரசாங்க அதிபர், ஊர்காவற்துறை(தீவுப் பகுதி) மற்றும் கற்பிட்டி பிரதேச காரியாதிகாரி [D.R.O]) அவர்கள் கொழும்பில் 02.03.2024 அன்று (சனிக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் - பொன்னம்மா தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ் சென்றவர்களான கந்தவனம் - லைலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சுசிலாதேவியின் அன்புக் கணவரும், மேனகா (வைத்திய கலாநிதி - கொழும்பு), சிவபரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும் ஆவார்.

 

ஜெபநேசன் (வைத்திய கலாநிதி கொழும்பு), பிரகலதா (ராதை-கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

ரஷிகா, புஜிதா, ஜஸ்மிதா, ரன்யா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான லிங்கேஸ்வரி, லிங்கநாயகி, தெய்வேந்திரலிங்கம் லிங்கராணி மற்றும் அரியலிங்கம் (இளைப்பாறிய அதிபர்), கிருஷ்ணலிங்கம் (ஒலிபரப்பாளர்-கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் (ஆசிரியர்- ஹாட்லி கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன்), சிவானந்தம் கருணாநந்தம், மற்றும் பரமேஸ்வரி, கலைச்செல்வி மற்றும் காலஞ்சென்றவர்களான ராஜகுலசிங்கம் (வைத்திய கலாநிதி-California) தர்மகுலசிங்கம் மற்றும் தர்மதேவி, மகேஸ்வரிதேவி, கமலாதேவி, பற்குணதேவி (சந்திரா), செல்வலிங்கம், ஜெயகுலசிங்கம்ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்