மரண அறிவித்தல்

திரு. சரவணமுத்து சிவலோகநாதன் (சிவா)

(இளைப்பாறிய இலங்கை போக்குவரத்துச் சபை சாலை பரிசோதகர் - கோண்டாவில், பகுதி நேர ஆங்கில ஆசிரியர்)

Tribute Now

யாழ். கந்தர்மடம் உடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, பிறவுண் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சிவலோகநாதன் அவர்கள் 08.11.2023 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து - சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - அன்னலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

லோகேஸ்வரி (சின்னக்கிளி) அவர்களின் பாசமிகு கணவரும், சுகன்யா (சுதா-பிரான்ஸ்), சிவகுமாரன் (சிவா- பிரான்ஸ்), சிவபாலன் (பாலன்- யாழ் மாநகர சபை), குகப்பிரியா (பிரியா-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

சரவணபவன் (பிரான்ஸ்), பாரதி (பிரான்ஸ்), சாந்தநாயகி, தீலிபநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

ஸ் ரீபன் சதீஸ்-பிரியா, சில்வன் சந்துரு, சஞ்சீவ் சுந்தர், ஹரிஸ், பாணு, சரண், சிவரூபன், கௌதமன் ஜனுக்‌ஷன், லூட்சிகா, சுவிந்தன், இந்துஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

அயன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கௌரி, லோகேந்திரராசா, அம்பலவாணர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்