மரண அறிவித்தல்

திருமதி. சரஸ்வதி சீனிவாசகம்

Tribute Now

யாழ் பன்னாலை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பன்னாலை , சித்தங்கேணி, வெள்ளவத்தை , பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சீனிவாசகம் அவர்கள் 08.11.2023 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் - தங்கபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

சீனிவாசகம் அவர்களின் அன்பு மனைவியும், ரவிச்சந்திரன் அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

சந்திரிக்கா அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான காமாட்சிப்பிள்ளை , திருஞானசம்பந்தமூர்த்தி, பரமேஸ்வரி மற்றும் சுப்பிரமணியம், காலஞ்சென்ற நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்ற ராஜதுரை , கருணேஸ்வரி, காலஞ்சென்ற ஜெபரத்தினம், செல்வராணி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான பரமானந்தம், சன்முகராசா , பொ ன்னுதுரை , இராமநா தன் மற்றும் கைலைநாதன், சரஸ்வதி, தனலட்சுமி, கனகாம்பிகை (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

 

ஹரிசன், ரிஷிகன், சாருகன்,ஆதர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

விமலாதேவி (சிங்கப்பூர்), இராஜகுமாரி (பிரித்தானியா), ஜெயந்தி (இலங்கை) மனோகரன் (பிரித்தானியா ), மனோகரி(இலங்கை ), சிவக்குமார்(பிரித்தானியா ), காலஞ்சென்ற சுரேஷ் (இலங்கை ), ராம்பிரகாஷ் (பிரித்தானியா ), ராம்பிரசாந்த் (ஐக்கிய அமெரிக்கா ), இதயகுமார் (பிரித்தானியா), ஐங்கரன்(அவுஸ்திரேலியா), ஜெயசுதன்(பிரித்தானியா), தர்சினி(பிரித்தானியா), கஜந்தி (பிரித்தானியா) ஆகியோரின் ஆசை அம்மாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்