மரண அறிவித்தல்

திரு. ச.கணேசன்

Tribute Now

திருச்சி மாவட்டம், வடக்கப்பட்டி கிராமத்தை பிறப்பிடமாகவும், கண்டி கட்டுக்கலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ச. கணேசன் அவர்கள் 25.01.2024 (வியாழக்கிழமை) அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சடையப்பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை - தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

திருமதி. லீலா சரோஜனி அவர்களின் அன்புக் கணவரும், சத்தியமூர்த்தி (பலகொல்ல), சிவமூர்த்தி (சிவா), பாஸ்கர் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தங்கராஜ் (திருச்சி), ராஜகோபால், மற்றும் தர்மலிங்கம் (இந்தியா), சதாசிவம் (சில்வ ஸ்டார் கொழும்பு), நடராஜ் (ஹேமாஸ் ஜீவலர்ஸ்), காலஞ்சென்ற சாரதாம்பாள் (இந்தியா) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற வீரையாபிள்ளை ராசம்மாள், பொன்னுசாமிப்பிள்ளை, ஜெயலஷ்மி, விஷ்வலிங்கம் ஜெயராணி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

 

பனையடியன் பிள்ளை (ஶ்ரீ கணேசனந்தா ஹோட்டல்), காலஞ்சென்ற தேவராஜ், நாகரட்ணம் (கொழும்பு) ஆகியோரின் சகலையும் ஆவார்.

 

காலஞ்சென்ற சுப்பிரமணியம், கனகராஜ் (ஜனத்தா ஹாட்வெயார்), பத்மநாதன் செல்வநாயகி, ரேவதி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

கற்பஹம், சாந்தி, ஜெபித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

கௌதம், தினுஷ்கர், உமாசாந்த், நவீன் பிரசாத், இஷான் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்