மரண அறிவித்தல்

திரு. ராமலிங்கம் செல்வநாதன்

Tribute Now

யாழ். மாட்டீன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், Horsens டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் செல்வநாதன் அவர்கள் 06.11.2023 (திங்கட்கிழமை) அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான R.S நடராஜா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சுதாமதி அவர்களின் அன்புக் கணவரும், லாவண்யன், விதுஷனா, அரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இரகுநாதன் (ஜேர்மனி), புனிதவதி (இலங்கை), விஜயநாதன் (சுவிஸ்), கலாவதி (இலங்கை), திலகவதி (பிரான்ஸ்), இரவீந்திரநாதன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

கலாமதி (இலங்கை), நவராஜா (சுவிஸ்), காந்திமதி (இலங்கை), மதுமதி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்