மரண அறிவித்தல்

திருமதி. இராமச்சந்திரன் புஸ்பராணி

Tribute Now

வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-05, பாரதி வீதி, கூமாங்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராமச்சந்திரன் புஸ்பராணி அவர்கள் 09.12.2023 (சனிக்கிழமை) அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு - முத்துப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற இராமச்சந்திரன் அவர்களின் அன்பு துணைவியாரும் ஆவார்.

 

தர்மகுணசிங்கம், திலகவதி, யோகராணி, காலஞ்சென்ற ஜெயராணி, உதயராணி (இந்தியா), நித்தியகல்யாணி (ஜேர்மனி), நவசோதி (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

மகேஸ்வரி (லண்டன்), காலஞ்சென்ற இராசநாயகம், செல்வநாயகம், காலஞ்சென்ற சதானந்தலட்சுமி, காலஞ்சென்ற வீரசிங்கம், காலஞ்சென்ற செல்வராசா, செல்வநாயகம் (ஜேர்மனி), சொக்கலிங்கம் (இந்தியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்