மரண அறிவித்தல்

திரு. பிலிப் மரியநாயகம் (வீமன்)

Tribute Now

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் மரியநாயகம் அவர்கள் 12-11-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப் ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆசிர்வாதம், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

மனோகரி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கைத்தான், அல்பிரட், யோசேப், செபமாலைமுத்து மற்றும் ஜசிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

ஜெனிற்றா, சுகந்தம், எமில்டன், சாள்ஸ் அன்ரனி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

ஜேம்சன், ரகுராஜன், விஜி, ஜமேலா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

 

அத்துடன் ஜெய்சன், ஜெய்தன், சஸ்வின், ஜெஸ்வின், தான்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்