மரண அறிவித்தல்

திரு. செல்லத்துரை சத்தியமூர்த்தி

(அதிபர், மீனாட்சி வர்த்தகக்கல்லூரி, கொட்டடி, யாழ்ப்பாணம், யாழ் கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரி முன்னாள் விரிவுரையாளர்-நல்லை ஆதீன முன்னாள் மேலாளர்)

Tribute Now

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா மதுரை , கோண்டாவில், புத்தளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சத்தியமூர்த்தி அவர்கள் 27.09.2023 (புதன்கிழமை) அன்று கனடா Toronto இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - செல்லக்கண்ணு தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

நவமணி (தங்கம்) அவர்களின் அன்புக் கணவரும், ஆனந்தமூர்த்தி (மூர்த்தி), அங்கயற்கண்ணி, மருதாசலமூர்த்தி (Dr. மருதா), இலட்சுமி நாராயணி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

சுகிர்தராணி (செல்வி), சுவீஸ்கரன், சண்முகப்பிரியா (ஷம்மி), பிரபாகரன் (பிரபா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

ஆதித்தன், மயூரி, சுகீரா, பிரவீன், திவ்யா, தினேஷ், திலக்ஷன், திவீனா, வைஷ்ணவி, வாமணன், விபூஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், அரியரத்தினம், தவமணி மற்றும் வைத்திலிங்கம் (மலேசியா), ராஜேஸ்வரி, இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், ஞானாம்பிகை , சிவநாதன், முத்துத்தம்பி மற்றும் Anne, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், மங்கையர்க்கரசி, பரமேஸ்வரி, சிவநாதன், சண்முகநாதன் ஆகியோரின் தந்தை வழி உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, யோகநாதன், புவனேஸ்வரி மற்றும் நேசநாதன், தில்லைநாதன், ஜெகநாதன், சந்திரேஸ்வரி, லிங்கேஸ்வரி ஆகியோரின் தாய்வழி உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
 
தகவல் | குடும்பத்தினர்.