மரண அறிவித்தல்

திருமதி. விஜயமலர் முருகையா

Tribute Now

யாழ். 52 ஸ்ரான்லி வீதியைப்(Vickna Tuition Center, Jaffna) பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயமலர் முருகையா அவர்கள் 05.06.2023 (திங்கட்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு(ஓவசியர்) மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற முருகையா வைத்திலிங்கம்(Post Master) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரன்(ராஜா), மகேஸ்வரன் (தேவா) மற்றும் ஞானேஸ்வரன்(ஜெயா- Toronto), ஈஸ்வரக்குமார்(விக்னா- Toronto), ஜெயந்திக்குமார்(Vickna Tuition Center, Jaffna), ரஞ்சித்குமார்(ரஞ்சித்- Toronto), சந்திரவதனி(சுவிட்டி- Toronto) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான நடராஜா(Cooperative Inspector Srilanka), சச்சிதானந்தம் (Fishery Department Inspector, Srilanka), பத்மநாதன்(CTB Srilanka) மற்றும் திலகவதி(கனடா), பஞ்சாட்சரதேவி(Health Department Srilanka) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பத்மாவதி, V.Sகனகரெட்ணம்(Reteried A.G.A Poonakari, Srilanka), T.கனகரெட்ணம்(Project officer, National Insititue of Education, Srilanka) மற்றும் மதனராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

செல்வராணி(India), அருள்ஜீவா(Jaffna), நளாயினி(Toronto), மாலினி(Toronto), சத்தியலோஜினி(Jaffna), கௌரி(Toronto), சண்முகநாதன்(Toronto) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

சிந்துஜா, மயூரன் - ரெத்னா, சதன் - சௌமிதா, தாமரை, மயிலோன், சொரூபா, தீபா, விதுர்ஷிகா, லதுஷன், சேயோன், சங்கரி, சாய்சுபா, சாயீசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

ரேணுகன், கேசிகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்