மரண அறிவித்தல்

திரு. விஸ்வலிங்கம் மதியாபரணம் (மோகன்)

Tribute Now

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லனைப் பிறப்பிடமாகவும், Gossau சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஸ்வலிங்கம் மதியாபரணம் அவர்கள் 08.02.2024 (வியாழக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - அன்னப்பிள்ளை, சின்னத்தம்பி - பொன்னம்மா தம்பதியினரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

தயாநிதி அவர்களின் ஆருயிர்க் கணவரும், சுயதாஸ், சஜீவன், சரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இந்துமதி, ஈஸ்வரதாஸ், காலஞ்சென்ற சந்திரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

ஜீவிதா, தாரகா, சுவிசன், காலஞ்சென்ற பிரகாஷ் மற்றும் பிரசன்னா, இந்துஜா, பிரவீனா, விதுசன், விபுஜா, ஜென்சி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

சஞ்சீவ்தாஸ், சுலக்‌ஷன், தர்ஷிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

 

ஜகானா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

 

அசோகன், காலஞ்சென்ற இலகநாதன் மற்றும் தவகுமார், பரமேஸ்வரன், ஶ்ரீதேவி ஆகியோரின் சகலனும் ஆவார்.

 

சித்தார்த், சகிரா, சாயா மித்ரா, லியான் சாத்விக், மஹா ஹாசனா, ஜோதி நிலாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

பிறேமகுமாரி, ஜனிதாம்பாள், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், கேமா, விஜயரெட்த்தினம் மற்றும் தெய்நேர்திரலிங்கம், கமலாதேவி, இந்திராதேவி, ரஞ்சனாதேவி, சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்