மரண அறிவித்தல்

திருமதி. விமலா பரிபூரணானந்தன்

(இராமநாதன் நுண் கலைப்பீட பழைய மாணவி, முன்னாள் B&Q ஊழியர்)

Tribute Now

யாழ். அச்சுவேலி தெற்கு திருப்பதி இல்லத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட விமலா பரிபூரணானந்தன் அவர்கள் 16.09.2022 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் கந்தையா (ஞானி) - ஞானசெளவுந்தரி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், யாழ். நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் - சிவானந்தசோதி தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் பரிபூரணானந்தன் (ஓய்வுபெற்ற Royal Mail ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும், டினேஷ், றமேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இவர் சியாமளா (கனடா), காலஞ்சென்ற நிர்மலா, கேதீஸ்வரன் (கனடா), கேதாரநாதன் (பிரித்தானியா), காந்திமதி (அவுஸ்திரேலியா), நித்தியானந்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் அனுஷா, மிலி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

இவர் ருக்குமணிதேவி(தேவி- கனடா), செந்தில்நாதன் (பிரித்தானியா), ஆனந்தகோபால்(கனடா), நடேசநாதன் (பிரித்தானியா), சத்தியபாமா(ராணி- பிரித்தானியா), கிருபாநந்தன்(பிரித்தானியா), சிறீகாந்தா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

 

இவர் அரன், கிரன், சேலன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் | குடும்பத்தினர்