மரண அறிவித்தல்

திருமதி. விஜயகுமார் நந்திகாதிலகேஸ்வரி

Tribute Now

சுழிபுரம் மேற்கு ஆலமோடையைப் பிறப்பிடமாகவும், இல – 08 “திலகபவனம்” நெல்லியான் வீதி, சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விஜயகுமார் நந்திகாதிலகேஸ்வரி 09.05.2023 (செவ்வாய்க்கிழமை) இறைபதமடைந்து விட்டார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான கங்காணியார் சண்முகம் – மீனாட்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும், பார்த்தசாரதி – பத்மாவதி ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார். 

 

விஜயகுமார் (ஓய்வுபெற்ற நூலகர் வலி. மேற்கு பிரதேசசபை) அவர்களின் அன்பு மனைவியும், சூரியப்பிரகாஷ் (கொமர்சல் வங்கி, மன்னார்), சிவப்பிரகாஷ் (மாணவன், ATI மட்டக்குளிய), ஜெயப்பிரகாஷ் (ஊவா வெல்லச பல்கலைக்கழகம்), சத்தியப்பிரகாஷ் (மாணவன் SLTC பாதுக்க ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

அமரர்களான வேலுப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி மற்றும் சறோஜினிதேவி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

மோகனகுமார் (லண்டன்) அவர்களின் அன்பு அண்ணியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்