மரண அறிவித்தல்

திருமதி. வெற்றிவேலு அரியபூமணி (மலர்)

Tribute Now

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வேம்பிராய்ச்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வெற்றிவேலு அரியபூமணி அவர்கள் 17.02.2024 (சனிக்கிழமை) அன்று அமரத்துவமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை -  சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

சதாசிவம் வெற்றிவேலு அவர்களின் அன்பு துணைவியாரும், இந்திரவதனி, ஜெயசிறி, ஜெயகுமார் (இத்தாலி), சிவக்குமார் (சுவிஸ்), உதயகுமார் (லண்டன்), விஷயகுமார் (லண்டன்), விஷயகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற மகேந்திரம் அன்னபூமணி (பிரான்ஸ்), வேலுப்பிள்ளை இராசபூமணி (லண்டன்), செல்லத்துரை ராசமணி, இராமநாதன் தயாழதேவி (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

மார்க்கண்டு, மோகனதாசன்,  தெசீர் (இத்தாலி), யோகமலர் (சுவிஸ்), குனேந்திரா (லண்டன்), சுதாஜினி (லண்டன்), சந்திரலிங்கம் (Sri Lanka Telecome Staff - மாதகல்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

மாதீஸ் (பிரான்ஸ்), அனுஜன் (இந்தியா), கோபிதா (முல்லைத்தீவு வல்லிபுர மகா வித்தியாலயம்), ஆனந்தகுமார் மாலதி (லண்டன்), தினேஷ் (பிரான்ஸ்), மகிந்தன் பிரியங்கா, நிதர்ஷன் (கனடா), யாதவன் (பிரான்ஸ்), ஆந்திரேயா (இத்தாலி), சினுசன் கிறிஸ்டினா (சுவிஸ்), சினுசியா (சுவிஸ்), நிறோசன் மகிஷா (லண்டன்), யதுசன் (லண்டன்), கனுஜன் (லண்டன்), துர்க்கா (லண்டன்), கஜினி (லண்டன்), கஜேந்திரகுமார் பகிஷா (அமெரிக்கா), யானுராஜ் சாளினி (பிரான்ஸ்), சதுஷா, அபிநயா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்