மரண அறிவித்தல்

திரு. வேலாயுதன் கோபாலப்பிள்ளை

Tribute Now

இலங்கை யாழ்/புங்குடுதீவு கிழக்கு 11 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.வேலாயுதன் கோபாலப்பிள்ளை அவர்கள் 12.07.2022 (செவ்வாய்க்கிழமை) சிவபதம் அடைந்தார்

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலாயுதன் - நாகம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - தையல்முத்து தம்பதிகளின் மூத்த மருமகனும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும், செல்வலெட்சுமி, யோகேஸ்வரி, செல்வமோகன் ( சூர்யா ஹோட்டல்), யோகமோகன் (Eagle Hardware - Jaffna) உதயமாலா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

இவர் ரகுநாதன் (George Traders), காலஞ்சென்ற கற்பகராஜா (BOC-Head office), புருணசகி, அமிர்தகௌரி (ஆசிரியை), சுபாகரன் (கணக்காளர்), ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

இலர் விஷ்ணுவேந்தன், சிவவேந்தன், கஜவேந்தன், கஜலஷ்மி, சிவச்செல்வி, சிவமீனா, சிவசுருதி, அபிஷாயினி, கார்த்திகன், சிவஅருணவி, ஆதவன், ஆதித்தன், மனோகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற தர்மலிங்கம், தங்கராசம்மா, காலஞ்சென்ற நாகராசா, இரத்தினம், செல்லம்மா, சிவசாமி, ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்