மரண அறிவித்தல்

திருமதி. வரதராசா புவனேஸ்வரி (இந்திராணி)

Tribute Now

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வரதராசா புவனேஸ்வரி அவர்கள் 02.02.2023 (வியாழக்கிழமை) அன்று கனடா மொன்றியலில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா - இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் - பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற வரதராசா அவர்களின் அன்பு மனைவியும், ரவிகுமார் (மொன்றியல்), ரஜனி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

இவர் விஜிதா (மொன்றியல்), குகேந்திரன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் சேரன், கார்த்திகா, கிருசாந், பதுசாந், சாளினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான இராசகோபால், சோமசுந்தரம், காந்திமதிநாதன், விஜயலட்சுமி (பேபி), தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான பரமானந்தன், தியாகராசா, பாலசுப்பிரமணியம், சரவணமுத்து, பன்னீர்செல்வம் மற்றும் திருநாவுக்கரசு (யாழ்ப்பாணம்), கேசவராணி (சுவிஸ்), சச்சிதானந்தன்(லண்டன்), கனடாவைச் சேர்ந்த நவமணி, குலேந்திரன் (காந்தி), புஷ்பராணி (இராசாத்தி), புவனேஸ்வரி (கிளி), திருக்குமார்(சிவம்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

இவர் தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்