மரண அறிவித்தல்

திருமதி. வாலாம்பிகை யோகநாயகம்

Tribute Now

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வாலாம்பிகை யோகநாயகம் அவர்கள் 07.08.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு குமாராசாமிப்பிள்ளை(மு.கு- யாழ் பெரியகடை பிரபல வர்த்தகர்) பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் லக்‌ஷ்மி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருகளும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற இழவாளையைச் சேர்ந்த யோகநாயகம் நாகரத்தினம்(அம்பாறை, கந்தளாய் சீனி தொழிற்சாலை பிரதான பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும், மகேந்திரகுமார், சத்தியகுமார், சந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

இவர் பிரபாகினி, யாழினி, மேனகா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

இவர் அஷ்மின், சஞ்ஜே, கெளதம், கெளஷன், விஷ்ணு, சங்கீதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற சுந்தரலிங்கம், கமலாம்பிகை- ஞெயபாலசிங்கம்(லண்டன்), தில்லைநடராஜா (கலிபோர்னியா), திருஞானசம்பந்தர்(குட்டி/சம்பந்தர்- கனடா), வடிவாம்பிகை- இராஜகுமாரன்(கனடா), குருநாதலிங்கம்(லண்டன்), சிவபாக்கியம்- சந்திரராஜா (லண்டன்), நகுலேஸ்வரி- நந்தகுமார் (கனடா), திருராசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். 

 

இவர் ராஜாம்பிகை- சுந்தரலிங்கம், காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம், இந்திரானி- தில்லைநடராஜா, அம்பிகை- திருஞானசம்பந்தர், காலஞ்சென்ற இராஜகுமாரன், யோகேஸ்வரி(ரதி) குருநாதலிங்கம், சந்திரராஜா, நந்தகுமார், அனுஷா- திருராசா, காலஞ்சென்றவர்களான செல்லமணி கனகரத்தினம், வேலுப்பிள்ளை, புவனேஸ்வரி பொன்னம்பலம், இராசநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

 

தகவல்:- குடும்பத்தினர்