மரண அறிவித்தல்

திரு. துரை சிவபாதம்

Tribute Now

யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வதிவிடமாகவும் கொண்ட துரை சிவபாதம் அவர்கள் 25.07.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரை - காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார். 

 

மகிழம்மா அவர்களின் பாசமிகு கணவரும், சீவகன்(டென்மார்க்), சுகந்தி (சுவிஸ்), சுகன்யா(சுவிஸ்), சிவதர்சன்(லண்டன்), சிவாதரன்(சுவிஸ்), சிவாஸ்கரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

ரவிச்சந்திரன்(சுவிஸ்), சுதன்குமார்(சுவிஸ்), கஜந்தினி(டென்மார்க்), சிவரூபி(லண்டன்), ஈஸ்வரி(ஈஷா- சுவிஸ்), மகேஸ்வரி(மகி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான செல்வம், தங்கம், பரமேஸ்வரி மற்றும் சிவபாக்கியம், சிவம், ராசரத்தினம், தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

காலஞ்சென்ற கந்தையா திரவியம் மற்றும் தியாகராசா, குணலிங்கம், சிவகுரு, தர்மரத்தினம், ஸ்ரீஸ்காந்தராசா, சுந்தரலிங்கம், அமிர்தலிங்கம், ஜெயபாலசிங்கம், ரவிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

ரவீன்சன், அஷ்வின், விஸ்நயா, அபிஸ்நயா, வசீகா, ஜதீகா, வின்சிகா, அஜீகன், அக்‌ஷயன், மித்திரா, அக்‌ஷ்நயா, அக்‌ஷரன், அகர்சன், விகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்