மரண அறிவித்தல்

திரு. தோமஸ் இம்மானுவேல் (ஜோய்)

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மார்ட்டின் வீதி, வசாவிளான், புலோலி, Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தோமஸ் இம்மானுவேல் அவர்கள் 03.11.2023 (வௌ்ளிகிழமை) அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம் இரப்பியேல்பிள்ளை - சிஸிலி ரூபி தம்பதிகளின் அருமை புதல்வனும், சிறில் கபிரியேல்பிள்ளை - தெரேசா கபிலியேல்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

நான்சி (சத்தியா) அவர்களின் அன்புக் கணவரும், தர்ஷன், தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இக்னேசியஸ் (Babi), அல்போன்சஸ் (Ravi), மத்தியூஸ் (Roby), பத்தலோமியஸ் (Regee), சார்ள்ஸ் (Remi), காலஞ்சென்ற பயஸ் (King) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

சிந்தியா, நிக்ஸன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்