மரண அறிவித்தல்

திருமதி. தியாகராசா தங்கம்மா

(ஓய்வுநிலை அதிபர் - யாழ்/ புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம், கிளி/ பெரியகுளம் ஐயனார் வித்தியாலயம் மற்றும் கிளி/ இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை)

Tribute Now

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 7ஆம் வட்டாரம், கிளிநொச்சி இராமநாதபுரம் 7 ஆம் யூனிற், மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கிளிநொச்சி ஆனந்தபுரத்தினை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா தங்கம்மா அவர்கள் 22.02.2023 (புதன்கிழமை) அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற தியாகராசா(ஓய்வுநிலை அதிபர்- யாழ்/புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு மனைவியும், கலையரசி (ஓய்வுநிலைப் பிரதி அதிபர்- கிளி/மத்திய ஆரம்ப வித்தியாலயம்), பத்மகாந்தன்(சுவிஸ்), காலஞ்சென்ற கலைச்செல்வி (கனடா), கலைவதனி(இளங்கணக்கியல் பட்டதாரி - வவுனியா வளாகம்- யாழ் பல்கலைக்கழகம்- கனடா), பிரேமகாந்தன் (ஆசிரியர்- கிளி/முரசுமோட்டை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சண்முகம், பூபதி மற்றும் நவரட்ணம்(கல்மடுநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவர் ஐஸ்வரி, சுந்தராம்பாள், புஸ்பவதி மற்றும் காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற செல்வராசா(ஓய்வுநிலைப் பிரதி கல்விப்பணிப்பாளர் - கிளிநொச்சி வலயம்), ஜெயகௌரி(சுவிஸ்), லோகநாதன் (கனடா), தர்மராசா (பொறியியலாளர்- கனடா), ஸஜனி (ஆசிரியர் - கிளி/இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

இவர் தர்ஷிகா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் வலிகாமம் வடக்கு), கிருஷிகன்(பல் வைத்திய நிபுணர்- மன்னார்), தஜிவன் (பொறியியலாளர்- சிங்கப்பூர்), ஹோபிகா(ஆசிரியர்- பரந்தன் இந்து மகாவித்தியாலயம்), மேனுஷா(கதிரியக்கவியலாளர்- சுவிஸ்), துஷானா(கணக்காளர்- கனடா), கதுர்ஷன்(பொறியியலாளர்- கனடா), தமிஷா (கனடா), யனுஷ் (கனடா), நூதனன் (கனடா), கவிநயன், கபிலன்(சிரேஸ்ட விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம்), கௌசிகா(பல்வைத்திய நிபுணர்- கிளிநொச்சி), துஷாத் (பொறியியலாளர் - யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவர் பிரமாத்மிகா, விஸ்வாத்மிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்