மரண அறிவித்தல்

திரு. திருநாவுக்கரசு நடராசா

Tribute Now

யாழ். புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு குணசிங்கபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு நடராசா அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகன் ஆவார்.

 

காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற விவேகானந்தராசா, யமுனா(கனடா), விபுலானந்தராசா(கனடா), விஜியானந்தராசா(பிரான்ஸ்), அம்ஸதூரிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

ஜெகதீஸ்(கனடா), புஷ்பலதா(சுவிஸ்), கிரிதரன்(பிரான்ஸ்), துஷியந்தி(கனடா), சிவதர்ஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

மேலும் சுரேன், பிரவேஷ், பிரவீனா, பிரியானா, மதுசா, மதுரவன், மானஷி, விதுஷன், அனந்திகா, சுலோசன், ஆரியன் ஆகியோரின் அன்புப் பேரனும், லெட்டிஷியா, தாஹிரா, ஜிதான்சமிரோ ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

அத்துடன் காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்வராசா, புஷ்பராணி மற்றும் தனபாலசிங்கம், ரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், கனகலிங்கம், காலஞ்சென்றவர்களான குணரட்னம், கந்தையா, முருகேசு, இரத்தினம், பாக்கியம், செல்லமுத்து, சித்திராதேவி, மற்றும் ரஞ்சிதமலர், கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கதிர்காமு, பொன்னையா, மகேஸ்வரி, தையல்நாயகி, மற்றும் குணரட்னம், புவனேஸ்வரி, மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்