மரண அறிவித்தல்

திரு. தில்லைநாதர் சோமசேகரம் (சோமு)

Tribute Now

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தில்லைநாதர் சோமசேகரம் அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லைநாதர், கண்மணி தம்பதிகளின் புத்திரர் ஆவார்.

 

காலஞ்சென்ற கந்தையா, லெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகன் ஆவார்.

 

கமலாவதி(கனடா) அவர்களின் பாசமிகு கணவர் ஆவார்.

 

திலீபன்(கண்ணன், கனடா), பிரதீபன்(தீபன், இலங்கை), ஷர்மிலன்(சர்பன், கனடா), அபிராமி(அபி, கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும், முகுந்தா(கனடா), ஜெயமலர்(பவா, இலங்கை), அமிர்தவள்ளி(பவா, கனடா), சஞ்சீவ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

மேலும் காலஞ்சென்ற சண்முகதாஸ், திலகவதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

அத்துடன் நவீன், லியானா, நேஹா, நதுன், அஷ்மீரா, அனிருத், ஷாஷா, யாதவ் ஆகியோரின் பாசமிகு அன்பு பேரனும் ஆவார்.