மரண அறிவித்தல்

திரு. தெய்வேந்திரன் சதாசிவம்

Tribute Now

யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் Pickering கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் சதாசிவம் அவர்கள் 17.11.2023 (வௌ்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - கண்ணம்மா தம்பதிகளின் அருமை மருமகனும் ஆவார்.

 

அமிர்தகௌரி (கௌரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும், தபேன், ஜட்ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தர்மலட்சுமி, இராஜநாயகம், இந்திரசேனன், பேரின்பநாயகி, சுந்தரலிங்ம் மற்றும் அனுசலட்சுமி (யாழ்ப்பாணம்), ஞானசொரூபி (யாழ்ப்பாணம்), தரம்சேனன் (கொழும்பு), வையந்திமாலா (கொழும்பு), ஶ்ரீஸ்கந்தராஜா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

பிரசாத், அலிசா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நடராசமணி மற்றும் சுலோசனா, நாகேஸ்வரன், விஜிதா, பிரபாலினி, ஶ்ரீகரநாதன், பிரதீபா, யோகமலர் (கனடா), விக்கினேஸ்வரராஜா (கனடா), நகுலேஸ்வரன் (கனடா), கமலரஞ்சினி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

லோகதாசன் சாந்தா தம்பதிகள், ரிச்செட் ஜாலிமூன் தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

 

இறைவன், பீஸ்மன், தாண்வி, தீயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்