மரண அறிவித்தல்

திருமதி. தங்கமலர் மயில்வாகனம்

Tribute Now

யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கமலர் மயில்வாகனம் அவர்கள் Sydney யில் 26.08.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு - தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். 

 

மயில்வாகனம் (இளைப்பாறிய இலங்கை போக்குவரத்து சபை வடமாகாண செயற்பாட்டு முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், Dr. வதனி (சிட்னி), Dr. மாலினி (சிட்னி), சுஜேந்திரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

ஜெயப்பிரகாஷ், ராகவன், ரஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான செல்லம்மா , தம்பிஐயா , குலவீரசிங்கம் மற்றும் திலகவதி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை , றோஸ்மலர், தெய்வநாயகி,
ஜெயராஜசிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

Dr. பிரஜித், அஞ்சலி, Dr. மயூரி, பிரவீன், Dr. அஷ்வின், உமேஷ், உதீஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

ஆஷான் அவர்களின் பூட்டியும்ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்