மரண அறிவித்தல்

திரு. தம்பு ராஜேந்திரன்

Tribute Now

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், பிறெட்றிக்கா வீதி, வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு இராஜேந்திரன் அவர்கள் 01.06.2024 (சனிக்கிழமை) அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு - இராசம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை-செங்கமலம் தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும், மகேந்திரன், விமலேந்திரன், பார்த்திபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கருணாகரி, நிரந்தரி, ராதிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

அபிஷா, வர்ஷா, வர்த்தனா, ஹர்ஷவர்த்தன், அஷ்விதன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான பாக்கியம், தம்பிப்பிள்ளை, தர்மலிங்கம், பூரணம், விசாலாட்சி, பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சிவராஜா, தேவராஜா ஆகியோரினதும் கமலராணி, நவரத்தினராஜா, ஜெயரத்தினராஜா, குணரத்தினராஜா, யமுனாராணி, நித்யானந்தராஜா ஆகியோரினதும் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்