மரண அறிவித்தல்

திருமதி. தம்பையா மகேஸ்வரி

Tribute Now

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பையா மகேஸ்வரி அவர்கள் 30-06-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புத்திரியும்,  காலஞ்சென்ற திரு. திருமதி முத்து சீதேவன் தம்பதிகளின் அருமை மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற முத்து தம்பையா அவர்களின் அருமை மனைவியும் ஆவார்.

 

பத்மாவதி(ஜேர்மனி), ஞானதீஸ்வரன்(அருள்- கனடா), அம்பிகாவதி(வசந்தி- கனடா), மகேந்திரன்(சிறி- கனடா), கலாநிதி, மனோறதி(கனடா), காலஞ்சென்ற தமிழ்ச்செல்வன், டிபாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற சிவராமலிங்கம்(ஜேர்மனி), சத்தியேஸ்வரன்(கனடா), ஞானதாசன்(கனடா), உருத்திரலிங்கம்(கனடா), சீதா(கனடா), லதா(செல்வி- கனடா), சுஜித்தா(ஜேர்மனி), சரவணபவன்(கொலண்ட்), கிரிதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற பூவதி(கொலண்ட்), இராஜதுரை(சிறுப்பிட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற இராசம்மா, தம்பிராஜா, தருமலிங்கம், சந்திராதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

 

வாசுகி(கொலண்ட்), தேவகி(லண்டன்), சபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

 

சபிதா(ஜேர்மனி), அசேல்(ஜேர்மனி), சஜிந்தன்(ஜேர்மனி), மாதினி(ஜேர்மனி), ஜனிஸ்(கனடா), அஸ்வினி(கனடா), சனுஜன்(கனடா), மிதுபன்(கனடா), சானியா(கனடா), சர்மியா(கனடா), கம்சனா(கனடா), அக்சனா(கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், ரிசிகா(கனடா), சஞ்சீவ்(கனடா), பிரித்திகா(கனடா), அனுசன்(ஜேர்மனி), அனுசா(ஜேர்மனி), அஜன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

 

சீனுஜா(ஜேர்மனி), மாதேஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்