மரண அறிவித்தல்

திரு. தம்பையா கணபதிப்பிள்ளை

Tribute Now

யாழ்ப்பாணம், நாச்சியார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.தம்பையா கணபதிப்பிள்ளை அவர்கள் கடந்த 14.09.2022 (புதன்கிழமை) காலமானார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் ஜெயம் அவர்களின் அன்புக் கணவரும், செல்வகுமார் (பிரான்ஸ்), ஆனந்தகுமார் (பிரான்ஸ்), இந்திரகுமார் (பிரான்ஸ்), இராஜ்குமார் (ஜேர்மன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் இன்பா (பிரான்ஸ்), கவிதா (பிரான்ஸ்), நிதிமலர் (பிரான்ஸ்), ரேகா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

இவர் லாவன்யா, சேயோன், லபிஷா, அஜீரா, அஸ்விந், நிதிக்ஷா, இஷிகா, ஆரினா, அனிஷ், ரிஷாக் ஆகியோரின் அன்புப் பாட்டனுமாவார்.

 

தகவல் | குடும்பத்தினர்