மரண அறிவித்தல்

திரு. சுப்பர் துரைசிங்கம்

(ஓய்வுநிலை அதிபர்,வலம்புரி பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர்)

Tribute Now

யாழ் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கை வசிப்பிடமாக கொண்டவரும் ஓய்வுநிலை அதிபர்,வலம்புரி பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர் திரு.சுப்பர் துரைசிங்கம் அவர்கள் 14.12.2022 (புதன்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் - நாகம்மா தம்பதியினரின்  மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசா - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.
 

இவர் பட்டம்மாளின் அன்புக் கணவரும், மைதிலி,மாலி(லண்டன்),ஆதிரையான் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவார். 
 

இவர் சிவாகர் (துறைத்தலைவர் மற்றும் விரிவுரையாளர் மொரட்டுவைப் பல்கலைக்கழகம்), மதுரிகா (லண்டன்), கோகிலவாணி (ஊடகவியலாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 
 

இவர் ஜகேஸ்கர்,பவுத்திரி,ஜாதவா ஆகியோரின்  பாசமிகு பேரனும் ஆவார்.
 

இவர் சரஸ்வதி (சிங்கப்பூர்), கதிர்காமசிங்கம், புஸ்பவதி, முருகையா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். 
 

இவர் இராஜேந்திரம், காலஞ்சென்றவர்களான வசந்தி, இரத்தினம் மற்றும்  ஆனந்தராணி, கிருஷ்ணவேணி, வட்சலா, ரவிச்சந்திரன், பாலச்சந்திரன், உமாசந்திரன், குகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்