மரண அறிவித்தல்

திருமதி. சுமதி தங்கராசா

Tribute Now

பரந்தனை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி புதுமுறிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுமதி தங்கராசா அவர்கள் 09-12-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார் காலஞ்சென்ற சண்முகசுந்தரம் நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை பொன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகளும், திரு தங்கராசா அவர்களின் அன்பு மனைவியுமாவார். சிவதர்சன், தாமரா, ஜினோசன், தேனுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும் பிரதீபன், லக்சனா ஆகியோரின் அன்பு மாமியும் அத்விகாவின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார். பாரதி, ஸ்ரீபதி, ரகுபதி, ஜெயபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் மகேஸ்வரி, பரமேஸ்வரி, சற்குணம், கணேசபிள்ளை, பத்மநாதன், சோமசுந்தரம், புவனேஸ்வரி, கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார். காலம் சென்றவர்களான திரு திருமதி செல்லப்பா சின்னம்மா, செல்லையா சின்னம்மா ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2021 ஞாயிறுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் ஒரு மணியளவில் கிளிநொச்சி புதுமுறிப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். தகவல் : குடும்பத்தினர்