மரண அறிவித்தல்

திரு. சுப்பிரமணியம் சந்திரகாந்தன்

Tribute Now

யாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், இணுவில் சிவநகர், கிளிநொச்சி உருத்திரபுரம், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சந்திரகாந்தன் அவர்கள் 25-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

உருத்திரபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற பத்மாவதி(பத்மா) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

கயூட்சன், துர்சிகா(தங்கா - மாவீரர்), சஜந்திகா(கஜா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், றவேந்தினி(ஏழில்), தாமோதரராசா(ராதா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற சிவஞானம், தம்பிஐயா(செல்வம்), நவரட்ணராஜா(குஞ்சுமணி), காலஞ்சென்ற இராசலிங்கம்(ராசா), குனேந்திரன்(சிவம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மகேஸ்வரி, காலஞ்சென்ற கைலேஸ்வரி, இந்திராணி, சசிகலா, அம்பிகாதேவி, இராஜேஸ்வரி(ராசு), சர்வேஸ்வரி(ஈசா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

ஆகாஷ், ஆரணி, ஆதி, ஆரதி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும், யஸ்வினி, கஷ்வி, பவிஷா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்