மரண அறிவித்தல்

திரு. சுப்பிரமணியம் ராஜரட்ணம்

Tribute Now

யாழ் கீரிமலையை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட    நடேஸ்வராக் கல்லூரி பழையமாணவர்  திரு சுப்ரமணியம் ராஜரத்தினம் அவர்கள் 03.05.2023 (புதன்கிழமை) லண்டன், Lewisham  வைத்தியசாலையில் காலமானார்.

இவர் காலம் சென்ற அமரர் கணபதிப்பிள்ளை - சுப்பிரமணியம்  அமரர் (திருமதி) ராசம்மா சுப்பிரமணியம்  ஆகியோரின் மகனும் ஆவார்.
 

காலம்சென்ற திருமதிகெங்காதேவி (பாப்பா) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
 

காலம்சென்றவர்களான ராசேந்திரம், குணரத்தினம்,  நாகராஜா மற்றும் திரு தேவராசா, திருமதி ராசேஸ்வரி தேவராசா, கஜேந்திரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார். 
 

அமரர் ராஜரத்தினம்  அவர்கள் மகாஜனக்   கல்லூரி பழைய மாணவர்களான திருவாளர்கள் சிறிகெங்காதரன் (கெங்கா), சிறிபாலகெங்காதரன் (ரவி),  சிறி சபேசன் (சபேசன்), திருமதி சிறிகெங்காதேவி சிறிதரன்(ரஜனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள்  பின்னர் அறிவிக்கப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 

தகவல்:- குடும்பத்தினர்