மரண அறிவித்தல்

திருமதி. சுப்பிரமணியம் பராசக்தி

ஓய்வுபெற்ற ஆசிரியை- சுதுமலை சின்மய பாரதி மகா வித்தியாலயம்

Tribute Now

யாழ். மானிப்பாய் சுதுமலை கிழக்கு மலைவேம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பராசக்தி அவர்கள் 01.01.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - விசாலாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (உடுப்பிட்டி, ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற பரம்சோதி(ஓய்வுபெற்ற ஆசிரியர்), பத்மநாதன்(சிறீ, கணக்காளர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவர் லீலாவதி, திவ்யரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

 

இவர் தபோநிதி(லண்டன்), கலாநிதி(கனடா), முருகதாஸ்(தாசன்- லண்டன்), குகதாஸ்(குகன- கனடா), விமலதாஸ்(விமலன்- ஐக்கிய அமெரிக்கா), சுந்தரதாஸ்(சுதன்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

இவர் அருண்குமார், விசாகன், வாசுகி, சுகுணா, சிவசகி, ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

இவர் ஜனனி, கஜானன், சிந்தூஜா, வைகுந்தன், தரன், பிரியங்கா, ஆகாஷ், வரண்யா, கோபிகா, தீபிகா, பிரவீன், நவீன், அஷ்வீன், கோகுலன், அபிராமி, கோபிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவர் உமா, இந்திரா, மைரா, இஷானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்