மரண அறிவித்தல்

திரு. சொக்கலிங்கம் யோகரத்தினம்

Tribute Now

யாழ். வேலணை மேற்கு 6 ஆம் வட்டாரம் சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல் அண்ணா வீதியை வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் யோகரத்தினம் அவர்கள் 25.07.2022 (திங்கட்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம் - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கைலாயபிள்ளை - இரத்தினாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் யோகேஸ்வரி (லீலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும், இராஜயோகன் (லண்டன்), கலையமுது (லண்டன்), இராஜமோகன் (லண்டன்), கார்த்தீபன், சங்கீதா, உதயா, யாதவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் சுபாசினி (லண்டன்), காலஞ்சென்ற தயாளன், அபிராமி (லண்டன்), திரிபுரகார்த்திகா, செந்தூரன், சுஜெய், சோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

இவர் அமுதாம்பிகை மற்றும் காலஞ்சென்ற கனகாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான அருமைநாயகம், சுந்தரம்பிள்ளை(சண்முகலிங்கம்) மற்றும் சீவரத்தினம் (பஞ்சலிங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

இவர் மல்லிகாதேவி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார். 

 

இவர் கிஷோர், ஹரிசன், பவிசா, தமிழ்நிலா, அபூர்வன், டிசாயினி, கஜானனன், அம்ருதா, அஷ்விதா, அரோன், அகிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்