மரண அறிவித்தல்

திருமதி. சிவசுப்பிரமணியம் இராசம்மா

Tribute Now

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், புகையிரத நிலைய வீதி, கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் இராசம்மா அவர்கள் 24.06.2024 (திங்கட்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானக்குட்டி - காசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்காளன இளையதம்பி-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற இ. சிவசுப்பிரமணியம் (நில அளவைத் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும், யசோதா (சுவிஸ்), கிரிஜா (ஓய்வு பெற்ற ஆசிரியர்-யா/கோண்டாவில் இந்துக் கல்லூரி), புவிதா (சுவிஸ்), மாலதி (கோண்டாவில்), காலஞ்சென்ற ரோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

விஜயரத்தினம் (சுவிஸ்), தயாபரன் (பிரபல வர்த்தகர்-கோண்டாவில்), பிரபாகரன் (சுவிஸ்), மகாதேவா (கோண்டாவில்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நடராசா, நாகலிங்கம் மற்றும் செங்கமலம், சிவயோகம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

 

ஜெகதீஸ்வரன், விக்னேஸ்வரன், ஜெயக்குமாரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

வித்தகன் (சுவிஸ்), வியாபவன் (சுவிஸ்), மதீவன் (ஆசிரியர்), பிரசாத், லக்ஸ்மன், கீர்திகன், சுவேதிகா (கனடா), மதுர்சன் (சுவிஸ்), மாதகவன் (சுவிஸ்), பிரியந்தன், கீதப்பிரியன், யாழினி, சரண்யா, கல்யாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

அதித்தனன், ஆராத்தியா, பிரிணிதா, பிறிமிகா, ஆதிரன், மித்திரன், ஆருத்திரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்