மரண அறிவித்தல்

திருமதி. சிவகாமி தங்கவேலாயுதம்

(ஓய்வு பெற்ற நெசவு ஆசிரியை (பத்தமேனி))

Tribute Now

யாழ் கைதடி நாவற்குழியை  (மறவன்புலோ)  பிறப்பிடமாகவும் இராஜவீதி அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவகாமி தங்கவேலாயுதம் அவர்கள் 14.11.2022 (திங்கட்கிழமை) அன்று கனடாவில் காலமானார் .

அன்னார் காலஞ்சென்ற  சுப்பையா - சின்னப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், நாகமுத்து - சின்னப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற  திரு தங்கவேலாயுதம்  (முன்னாள் CTB சாரதி) அவர்களின் அன்பு மனைவியும், யசோதா(ஜேர்மனி) , கவிதா (கனடா), அமுதா (திருகோணமலை) கேதீஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 
 

இவர் காலஞ்சென்ற  திரு மயில்வாகனம் அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார். 
 

இவர் பூவாதேவி , காலஞ்சென்றவர்களான   தர்மலிங்கம்,  இராஜமுத்து, செல்லப்பாக்கியம், இராஜேஸ்வரி, பத்மாவதி  அவர்களின் மைத்துனியும் ஆவார். 
 

 
.இவர் ஜெயா ,இரவீந்திரன் ,ரஜனிகாந் , கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 
 

இவர் அபிநயா, சர்மிகா , மதுஷனா , நயனுகா, அனுஜயன் , திஷாண் , திஷ்மியா , தார்மியா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்