மரண அறிவித்தல்

திரு. சின்னத்தம்பி பரம்சோதி

(ஓய்வுபெற்ற குடியேற்ற உத்தியாேகத்தர் - துணுக்காய்)

Tribute Now

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், யோகபுரம் மத்தி மல்லாவி, சுவிஸ் Männedorf  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பரம்சோதி அவர்கள் 21.12.2022 (புதன்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - சின்னத்தங்கச்சி தம்பதிகளின் இளைய மகனும் ஆவார்.

 

இவர் சிவபாக்கியம் (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும், தபோநிதி (யாழ்ப்பாணம்), கலாநிதி(ஜேர்மனி), வரதராஜன் (சுவிஸ்- செங்காளன்), கிருபாகரன் (சுவிஸ்- மனடோர்ப்), காலஞ்சென்ற முகுந்தன், தயாநிதி (சுவிஸ்- சூரிச்), அனந்தன் (சுவிஸ்- சூரிச்), சற்சொரூபி (சுவிஸ்- லுசேர்ன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான மகாதேவி, விசாலாட்சி, வைத்திலிங்கம்பிள்ளை, பிறைசூடி, திலகர் மற்றும் கோபாலன் (வட்டக்கச்சி), பரமேஸ்வரி (கந்தரோடை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

இவர் காயாரோகணன், காலஞ்சென்ற சிவநாதன், தாரணி, சுபாஜினி, ஞானேந்திரன், கலைமகள், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

இவர் சௌமி, சௌயா, கயானன், சௌயந்தி, அயூரன், ஆரணன், அன்பரசி, அபிசனா, செந்துஜன், புகிதன், ஆரணியா, அருணன், அபிநாத், அதிசயா, ஷண்முகப்பிரியா, ஹர்சன், அபிசன், மயூரிகா, சிறிகுமார்- சறோசாதேவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

இவர் ஜனாத், ஜஸ்மினி, ஜசிந்தா ஆகியாேரின் அன்பு பூட்டனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்