மரண அறிவித்தல்

திரு. சின்னத்தம்பி படைவீரசிங்கம்

Tribute Now

யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி படைவீரசிங்கம் அவர்கள் 17.11.2022 (வியாழக்கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்ற சின்னத்தம்பி - முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்றவர்களான செல்லையா - நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் விஜயலக்‌ஷ்மி(லக்‌ஷ்மி) அவர்களின் பாசமிகு கணவரும், சிவகுமார்(பிரான்ஸ்), சாந்தகுமார் (ஜேர்மனி), விஜயகுமாரி(இலங்கை), இந்திரகுமாரி (கனடா), செல்வகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் பொன்னுத்துரை(இலங்கை), வரதராசா (இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நல்லமுத்து, கனகம்மா, வீரசிங்கம், செல்லத்துரை, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

இவர் ராஜேஸ்வரி(பிரான்ஸ்), ஜெகதாம்பிகை (ஜேர்மனி), கனகரெட்ணம்(இலங்கை), சிவராசா (கனடா), பமிலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

இவர் கெளதம்- ஷனீஸ்(பிரான்ஸ்), கெளசீகன் (பிரான்ஸ்), கெளசிகா(பிரான்ஸ்), பிருந்தா (ஜேர்மனி), லதன்(ஜேர்மனி), கெளசலா - தோமஸ் (ஜேர்மனி), தாரணி- சுபராஜீவ்(லண்டன்), கானுஜா - நிருயன்(கனடா), கௌதமி - துஸாகரன் (லண்டன்), அகிலன் - வராகினி (கனடா), டிக்சன்- அஸ்வினி(கனடா), அக்சயா (கனடா) அபினாத்(கனடா), அஸ்வர்யா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

இவர் ஹரிசன்(ஜேர்மனி) ஹருனிகா(லண்டன்) அஹானா(கனடா), ஆருஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். 

 

இவர் தங்கராசா, காலஞ்சென்றவர்களான பராசக்தி, இராசமணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்