மரண அறிவித்தல்

திரு. சின்னராசா பாலசிங்கம்

Tribute Now

யாழ் அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், இல - 7A,பண்டாரக்குளம் மேற்கு ஒழுங்கை, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னாராசா பாலசிங்கம் அவர்கள் நேற்று 10.02.2024 (சனிக்கிழமை) அன்று காலமாகி விட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னராசா - சிவகாமி தம்பதியரின் அன்பு கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவரர்களான செல்லத்துரை - வள்ளிப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

சத்தியேஸ்வரி (சத்தி) அவர்களின் அன்புக் கணவரும், அனிஜன் (அயன்), நிதர்ஜன் (நிசன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னபாக்கியம், செல்வநாயகி (இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

சிவகாமசுந்தரி, விநாயகமூர்த்தி, குலவீரசிங்கம் (இந்தியா), காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, பாலசிங்கம் மற்றும் குலசிங்கம் (கனடா), குணசிங்கம் (லண்டன்), பகீரதி (கனடா),  யோகசிங்கம் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

யசோ (கனடா), காலஞ்சென்ற வசந்தி- சுரேஸ் (Doctor), தினேஷ் (கனடா), விஜய் (கனடா) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.

 

காயத்ரி (கனடா), கஸ்தூரி (சுவிஸ்), கல்பனா (லண்டன்), சிவகுமார், விக்னேஸ்வரன், செல்வகுமாரன், மல்லிகா (Newsland), காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணகுமார், சகாதேவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்