மரண அறிவித்தல்

திரு. சண்முகம் தியாகராஜா

Tribute Now

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், Berlin ஜேர்மனி, Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் தியாகராஜா அவர்கள் 29.01.2024 (திங்கட்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - கமலாம்பினை தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

கிருகாம்பாள் (கிருபா) அவர்களின் பாசமிகு கணவரும், ரோகிணி, தியாகசீலன் (நியூசிலாந்து), பாமினி, அஜந்தன், சேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

அயனரிகுமார் (கண்ணன்), அனுசியா (நியூசிலாந்து, ரவிதரன், வானதி, நிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

அஜித், கிஷோத், விஜித், தக்‌ஷியா, தஸ்மிகா, துளஷிகா, நிவேதா (நியூசிலாந்து), சுவேதா (நியூசிலாந்து), மாயா, நேகா, வருண், நிலா, யாதிவ், அக்‌ஷயா, டானியல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான குணரெட்ணம், விஜயரெட்ணம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, நல்லம்மா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

 

வாமதேவன், மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான சிறிபதி, பூபதி மற்றும் மகபதி (சுவிஸ்), வளர்மதி (ஹொலண்ட்), சரஸ்வதி (ஜேர்மனி), தனலஷ்சுமி, பாலரஞ்சினி, ஜெயமதி, திருநயனி, தேவாந்தினி, கலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற கிருபானந்தன் (ஜேர்மனி), கிருஷ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி, கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால், காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன், கிருஷ்ணநாதன், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணவாசன், கிருஷ்மாலா மற்றும் மகேந்திரராணி, தயாநிதி (இலங்கை), ரஞ்சினி (இலங்கை), ஜெயகுமார், அம்பிகையன், சுசிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

காலஞ்சென்ற சம்பூரணன், சுயம்புலிங்கம் (கலைச்செல்வன்), தவராசா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்