மரண அறிவித்தல்

திருமதி. செல்வசோதி வள்ளியம்மை

Tribute Now

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-Sous-Bois வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வசோதி வள்ளியம்மை அவர்கள் 06.12.2023 (புதன்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை - தங்கமுத்து தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற செல்வசோதி அவர்களின் அன்பு மனைவியும், சிவகுமாரன் அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

காலஞ்சென்றவர்களான சுப்பையா, முருகேசு, கிருஷ்ணசாமி (மாயவர்), தெய்வானைப்பிள்ளை, நடராசா (ராசு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்ற நாகம்மா, சரஸ்வதி, நடராசா, தனபாக்கியம், சற்குணம் மற்றும் நாகேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

சுதாஜினி அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

வைஷ்ணவன், தாரிகா, தர்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்