மரண அறிவித்தல்

திரு. செல்லையா கோணேஸ்வரன்

Tribute Now

யாழ் சுதுமலை ,மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், France, Melbourne Australia வை வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லையா கோணேஸ்வரன் அவர்கள் நேற்று  11.12.2023 (திங்கட்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா யோகரட்ணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அரியரட்ணம் - கிருபாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

மாலினி (சித்திரா) அவர்களின் அன்புக் கணவரும், மயூரன் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

ஹர்ஷினி அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

டுருவன், கேய்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான திருக்கேதீஸ்வரன் (கனடா), கிருஷ்ணகுமாரி (இலங்கை), சூரியகுமாரி (இளைப்பாறிய அதிபர், மானிப்பாய் மகளீர் கல்லூரி), முனீஸ்வரன் (கனடா), சந்திரகுமாரி (இளைப்பாறிய உப அதிபர், மானிப்பாய் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

 

றுயினா, காலஞ்சென்ற புத்திரசிகாமணி, வடிவாம்பாள், அற்புதராசா,  ஜெயவீரசிங்கம், வசந்தி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், மற்றும் ரஞ்சினி (இலங்கை), விஜநகுமார் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்