மரண அறிவித்தல்

திரு. சற்குணம் முகுந்தன்

Tribute Now

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணம் முகுந்தன் அவர்கள் 24-06-2022 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னதுரை சற்குணம், சுசிலாதேவி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும் ஆவார்.

 

இவர் கிருஷ்ணவேணி (பிரான்ஸ்), சைலஜா (இலங்கை), நிசந்தன் (பிரான்ஸ்), தர்சிகா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் கருணாமூர்த்தி (பிரான்ஸ்), சுகந்தன் (இலங்கை) ஆகியோரின் மைத்துனரும், அனுசன், மதுசன், அக்‌ஷயா (பிரான்ஸ்), ஆதீசன், அக்‌ஷரன், இஷான் (இலங்கை) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

 

மற்றும் சிவலோகநாதன் (இலங்கை), காலஞ்சென்ற சிவகுணநாதன், பரமேஸ்வரன் (நிசான் - La Courneuve),  சிவயோகநாதன் (லண்டன்) ஆகியோரின் மருகனும், காலஞ்சென்ற தனபாலசிங்கம், அமிர்தலிங்கம் (இலங்கை), மகாதேவன் (நோர்வே), சிவனேஸ்வரி (இலங்கை), சறோஜினிதேவி (இலங்கை), விமலாதேவி (இலங்கை), சிவகுணநாயகி (இலங்கை) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்