மரண அறிவித்தல்

திருமதி. சர்வானந்தன் பூவதி

Tribute Now

நல்லூர் வைமன் வீதியை பிறப்பிடமாகவும், கனடா ரொரண்ரோ நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி  சர்வானந்தன் பூவதி அவர்கள் 25.11.2023 (சனிக்கிழமை) அன்று இறைபதம் எய்தினார் என்பதனை அறியத் தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற வேலாயுதம் - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம் - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற சர்வானந்தன் (கல்விக்கந்தோர் யாழ்ப்பாணம்) அவர்களின் ஆருயிர் மனைவியும், தனராஜ், தமயந்தி, கருணாகரன், நளாயினி,பகீரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

காலஞ் சென்றவர்களான பாலச்சந்திரன், ரவீந்திரன்,மற்றும் மகேந்திரன், மனோன்மணி  ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.

 

எலேனா,பாலசுப்பிரமணியம்,செல்வி,லிங்கேஸ்வரன், கௌரி ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

 

நர்மதா(துளசி) பகீரதன்,சஞ்சயன் றொசானி, வைஷ்ணவி, தமாரா, கிருஷாண், ஹரீஷ்,ரமணா,அஷ்வின்,லட்சுமி, சேயோன்,தரன்,மற்றும் ராணவ்வின் அன்பு பேத்தியும் ஆவார்.

 

வினோத்,வினித்தின் பூட்டியுமாவார்.

 

தகவல் | குடும்பத்தினர்