மரண அறிவித்தல்

திருமதி. சரஸ்வதி அம்பாள் சிவபாதம்

Tribute Now

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி அம்பாள் சிவபாதம் அவர்கள் 23.01.2023 (திங்கட்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மனோன்மணி - தாமோதரம் தம்பதிகளின் புதல்வியும், தெய்வானை - சதாசிவம் தம்பதிகளின் மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற சிவபாதம்(MLT-MRI) அவர்களின் அன்பு மனைவியும்,சிவரவி(Hello ரவி-Swiss), ஜெயந்தினி, தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இவர் Veronic, நாகலிங்கம், காலஞ்சென்ற ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

 

இவர் Melissa, David சுஜன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

 

இவர் சரண்யா, சங்கீதா, மனிஷ், லும்பிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார். 

 

இவர் கனடாவை வாழ்விடமாக கொண்ட நரசிங்கவேல், காலஞ்சென்றவர்களான சத்தியபாமா, கிருஷ்ணவேல், தங்கவடிவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்