மரண அறிவித்தல்

திரு. சபாரத்தினம் கந்தசாமி

Tribute Now

யாழ்.நீர்வேலி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் கந்தசாமி அவர்கள் 26.08.2022 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சபாரத்தினம் - நல்லமுத்து தம்பதியரின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை - செல்வநாயகம் தம்பதியரின் அன்பு மருமகனும் ஆவார்.
 

இவர் இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும், புஸ்பாகரன்(லண்டன்), இந்திரகரன்(லண்டன்), மகிழினி (வைத்தியர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்), சாமினி (லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும் ஆவார்.
 

இவர் துசித்தா(லண்டன்), மேகலா(லண்டன்), விமலன்(வைத்தியர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்), றசீகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் அஸ்வின், அஸ்மி, ஓவிய, பிரியன், தருண், பவிஷன், நிதிஷன், கயூரி, கீர்த்திக், ஆருஷா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார். 
 

இவர் பூபதியம்மா, காலஞ்சென்றவர்களான இலட்சுமியம்மா, தவராசா, மற்றும் விஜயரட்ணம், புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
 

இவர் காலஞ்சென்ற குணரத்தினம் அவர்களின் மைத்துனரும் ஆவார்.
 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:- குடும்பத்தினர்