மரண அறிவித்தல்

திரு. றோஸ் மேரி அருளானந்தம் (நல்லம்மா)

Tribute Now

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், Montmagny பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. றோஸ் மேரி அருளானந்தம் அவர்கள் 19.01.2024 (வௌ்ளிக்கிழமை) அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கபிரியேல்பிள்ளை பஸ்த்தியாம்பிள்ளை - பேர்டினற் ஸ்ரனிஸ்லாசம்மா தம்பதியினரினி் அன்பு மகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற தோமஸ் அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும், கவிதா (ஜேர்மனி), கீதா மரியா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான திருமதி. அந்தோனிப்பிள்ளை லில்லி அக்னெஸ், திருமதி. பிலோமினா பாக்கியநாதர் மற்றும் திரு. அலெக்ஸ்சாண்டர் பிரான்சிஸ் போஜியா காிரியேல்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

பிரான்சிஸ் சேவியர் (ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

Katia, Toney & Jil, Terry & Debora, Judy, Elodia, Claudie, Brighton ஆகியோரின் பாசமுள்ள அம்மம்மாவும் ஆவார்.

 

காலஞ்சென்றரவர்களான திரு. அந்தோனிப்பிள்ளை, திரு. பாக்கியநாதர் மற்றும் திருமதி சிங்கராயர் ஜெயசாந்தர் சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

முருகேசன் ஜெனற் கலிஸ்ரா (ஜேர்மனி), அல்பிரட் சாரதா (கனடா), தவராசா ரஞ்சினி (ஜேர்மனி), விஜயகுமார் ஜெயமதி (லண்டன்), றேமன் (ரத்தினகுமார்), யூலியட் (லண்டன்), ராச்குமார் பிரான்சிஸ் ரதிகா (பிரான்ஸ்), வீரசிங்கம் றஜனி (அவுஸ்திரேலியா), விக்ரா் ஜீன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ரவிராஜ், பிளசில்டா (அவுஸ்திரேலியா), சாம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்டியும் ஆவார்.

 

கிறிஸ்ரா (பிரான்ஸ்), றீகன் (லண்டன்) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்