மரண அறிவித்தல்

திருமதி. இரவீந்திரன் வினோதினி

Tribute Now

யாழ் காரைநகர் தோப்புக்காடையைப் பிறப்பிடமாகவும், மகாறம்பைக்குளம், வவுனியா,நீர்கொழும்பு ஆகியவற்றை வாழ்விடமாகவும், பொபினி பிரான்ஸை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திருமதி இரவீந்திரன் வினோதினி அவர்கள் 26.09.2022  (திங்கட்கிழமை) அன்று இயற்கை எய்தியுள்ளார்.

அன்னார் திரு. திருமதி. நாகேஸ்வரன் - பத்மாவதி தம்பதிகளின்  அன்பு மகளும், திரு. திருமதி. சிவசுப்பிரமணியம் - தேவகதேவி தம்பதிகளின் மூத்த அன்பு மருமகளும் ஆவார்.
 

இவர் திரு. சிவசுப்பிரமணியம் இரவீந்திரன் அவர்களின் மனைவியும், செல்வி நிதர்சனா, செல்வி தரணியா, செல்வன் கபிலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
 

இவர் திரு. நா. அரவிந்தன், திருமதி. குபேந்திரா நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு  சகோதரியும் ஆவார். 
 

இவர் திரு.சி.ரஜீந்திரன், திருமதி. லதாங்கி இராஜமாறன், திரு . சி. கஜேந்திரன், திரு.சி.சிவேந்திரன் ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார்.
 

இவர் திருமதி. அரவிந்தன் மைதிலி, திரு. நிசாந்தன் ஆகியோரின் அன்பான மைத்துனியும் ஆவார். 
 

இவர் திரு. இராஜமாறன், திருமதி.  ர.விமலலோஜினி, திருமதி. ஜெனி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
 

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:-  குடும்பத்தினர்